Breaking News

தமிழர் பகுதியில் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம்..!

 தமிழர் பகுதியில் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம்..!



மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11) பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.


பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.


பண்டாரியா வெளியில் உள்ள தனது வீட்டில் இருந்து வயல் அறுவடை வேலைகளுக்காக சென்ற போது வயலில் இருந்த பாம்பு தீண்டியது.


பின்னர் அவரை மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவுள்ளது.