கால்பந்து செம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணியின் சீருடையை அணிந்து விளையாடிய முதல் முஸ்லிம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள 25 வயதுடைய ஜெட் ஸ்பென்ஸ் (Djet Spence), பிரித்தானிய மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
கால்பந்து செம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணியின் சீருடையை அணிந்து விளையாடிய முதல் முஸ்லிம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள 25 வயதுடைய ஜெட் ஸ்பென்ஸ் (Djet Spence), பிரித்தானிய மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
கால்பந்து செம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டியில், நோர்வே அணியை இங்கிலாந்து வீழ்த்திய பின்னர், ஜெட் ஸ்பென்ஸ் மைதானத்தில் முழங்காலிட்டு, கைகளை வானத்தை நோக்கி உயர்த்தி இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.
கால்பந்து உலகின் மிகப்பெரிய மேடையில், இங்கிலாந்து அணி வீரர் ஒருவர் முஸ்லிம் முறைப்படி பிரார்த்தனை செய்ததைக் கண்டு மில்லியன் கணக்கான ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தற்காப்பு ஆட்டக்காரரான ஸ்பென்ஸ், "'மூன்று சிங்கங்கள்' (இங்கிலாந்து அணியின் புனைபெயர்) அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் முஸ்லிம் வீரராக இருப்பது பெருமையாக உள்ளது. சிறுவயது முதலே நான் கனவு கண்ட தருணம் இது. என்னைப் பார்த்து பல சிறுவர்கள் ஊக்கம் பெறுவார்கள் என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற இங்கிலாந்தின் நெருங்கிய ஐரோப்பிய அணிகளில் நீண்ட காலமாக முஸ்லிம் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு இது நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. பல்வேறு கருத்துகளுக்கு மத்தியில், இங்கிலாந்து அணியின் இந்த மைல்கல், எந்த மத நம்பிக்கையைச் சார்ந்தவராக இருந்தாலும் ஒருவர் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளதாக பயிற்சியாளர்களும் ரசிகர்களும் கருதுகின்றனர்.
ஸ்பென்ஸின் இந்த சாதனை, கால்பந்து மைதானங்களைத் தாண்டி, பிரிட்டன் சமூகத்தின் நம்பிக்கையாகவும் முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது.
#sooriyannews #Srilanka #TruthAtAllCosts #england #football
