ஆரோக்கியமான பிள்ளை வளர்ப்பும் மகிழ்ச்சியான மறுமலர்ச்சி வலைப்பின்னலும் எனும் தொனிப்பொருளிலான ஐந்து நாள் செயலமர்வு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பகத்தில் இன்று 07.07.2026 செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
ஆரோக்கியமான பிள்ளை வளர்ப்பும் மகிழ்ச்சியான மறுமலர்ச்சி வலைப்பின்னலும் எனும் தொனிப்பொருளிலான ஐந்து நாள் செயலமர்வு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பகத்தில் இன்று 07.07.2026 செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
மாற்றம் அறக்கட்டளையின் ஸ்தாபகரும், தலைவருமான வின்சன்ற் பற்றிக் அடிகளார் தலைமையில் ஆரம்பமான மேற்படி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ம. பிரதீபன், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்கலாநிதி யோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளாரும், யாழ் மாகாண அமலமரி தியாகிகள் சபையின் முதன்மை ஆலோசகர் அருட்பணி பா. அன்ரனி ஜேசுதாசன் அடிகளார் அவர்களும், ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் கோகிலா மகேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி கருதமர்வில் பல்வேறு துறைகளையும் சார்ந்த வளவாளர்களும் பங்கேற்பாளர்களாக யாழ் மாவட்ட பிரதேச செயகங்களின் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், மாற்றம் அறக்கட்டளையின் பணியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
இன்றைய முதலாம் நாள் செயலமர்வில் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்புத் திறன்கள் எனும் தலைப்பில் ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளரான கோகிலா மகேந்திரன் அவர்கள் நிகழ்வை வழிநடாத்தினார்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள மேற்படி செயலமர்வானது மாற்றம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ் மாகாண அமைதிகள் குழுமத்துடனும் வளர்பிறை உள ஆற்றுப்படுத்தல் உளவள சிகிச்சை நிலையத்துடனும் இணைந்து முன்னெடுக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
