Breaking News

நிந்தவூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளராக எம்.எம். முஹமட் சப்ரி கடமையேற்பு...!!

 நிந்தவூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளராக எம்.எம். முஹமட் சப்ரி கடமையேற்பு...!!


எஸ் ஜே புஹாது 



நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புதிய பிரதி திட்டமிடல் பணிப்பாளராக திரு. எம்.எம். முஹமட் சப்ரி இன்று (04) பதவியேற்றுள்ளார்.


உஹன பிரதேச செயலகத்தில் சுமார் 08 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், இன்று முதல் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் தனது சேவையைத் தொடர்கிறார்.


சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இலங்கை திட்டமிடல் சேவையின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல பிரதேச செயலகம், அம்பாரை மாவட்ட செயலகம், மகா ஓயா, உஹன மற்றும் பொத்துவில் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பல நிலையங்களில் சேவையாற்றியுள்ளார்.


 இப்பணிக்காலத்தில் இன, மத பேதமின்றி அனைவருடனும் நல்லுறவை பேணி, சிறந்த நற்பெயரையும் பணிச்சாதனைகளையும் பெற்றுள்ளார்.


இவரது பதவியேற்பு நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது, 


இதில் உஹன உதவி பிரதேச செயலாளர் ஏ.எஸ்.எம். அஸீம், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் கணக்காளர் எஸ். எம். ஹாறூன், அட்டாளச்சேனை உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர், மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ எம் சுல்பிகார் , நிர்வாக உத்தியோகத்தர் எம் ரீ.எம்.சரீம் பலரும் கலந்து கொண்டனர்.


புதிய பிரதி திட்டமிடல் பணிப்பாளராக திரு. எம்.எம். முஹமட் சப்ரியின் பணி சிறக்க ஏசியன் நியூஸ் ஊடக வலையமைப்பின் சார்பில் வாழ்த்துக்கள்.