Breaking News

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரியில் மரநடுகை..!

 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரியில் மரநடுகை..!



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2026 வெள்ளிக்கிழமை தென்மராட்சி அபிவிருத்திக் கழகமும் (Thenmaradchi Development Association) கிரீன் குளோப் (Green Globe) அமைப்பும் இணைந்து சாவகச்சேரி நகர சபையுடன் கைகோர்த்து காலை 6.30மணிக்கு தனங்கிளப்பு வீதி, கண்ணாடிப்பிட்டி இந்து மயானம் ஆகிய இடங்களில்

மரநடுகை நிகழ்ச்சியை முன்னெடுக்கவுள்ளனர்.


இந்த சிறப்பு நிகழ்வை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் என்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் (Consultant Orthopedic Surgeon) Dr. S. சசிகரன் அவர்கள் ஆரம்பித்து வைக்க உள்ளார். 


அவருடன் சாவகச்சேரி நகரசபை தவிசாளர், உபதவிசாளர், செயலாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் தென்மராட்சி அபிவிருத்திக் கழக நிர்வாகத்தினர், தென்மராட்சியின் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


எதிர்கால தலைமுறைகளுக்காக பசுமை நிறைந்த, ஆரோக்கியமான மற்றும் அழகிய சூழலை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.