வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது..!
வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது..!
வவுனியாவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ்நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டு கான்ஸ்டபிள் தர உத்தியோகத்தர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 1கிலோ 970கிராம் கேரள கஞ்சா கைப்பற்றபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸாரினால் இவ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
