வடமராட்சி கிழக்கு முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு..!
வடமராட்சி கிழக்கு முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு..!
வடமராட்சி கிழக்கு முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு பருத்தித்துறை பிரதேச சபையின் மருதங்கேணி உப அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் காலை 10:00 மணியளவில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்திரலிங்கம் சுவர்ணன் தலைமையில் 2 நிமிட இறை வணக்கத்துடன் ஆரம்பமானது.
2014 ம் ஆண்டு ஆம்பிக்க பட்ட குறித்த சங்கத்தின் 2 ஆண்டு காலம் பூர்த்தியடைந்த நிலையில் இன்று புதிய நிர்வாகம் தெரிவு செய்யபட்டது.
இதில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வல்லிபுரம் விபுலன், ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
இந் நிகழ்வில் வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி, மருதங்கேணி மருத்துவ மனை முன்பாக தரித்து நின்று முச்சக்கர வண்டி செலுத்துவோர் மற்றும் புதிய முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
