Breaking News

மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நில அளவீடு.....!



மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நில அளவீடு.....!



கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமில்17 பொது மக்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டம் இடப்பட்டது 


அந்த வகையில் குறித்த நிள அளவையை எதிர்த்து பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களால் ஓர் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திட்டம் இட்டு இன்றைய தினம் காலை 8 மணியளவில் குறித்த இராணுவ முகாம் முன்றலில் இடம்பெற்றது 


இந்த ஆர்ப்பாட்டத்தில் காணியுரிமையாளர்கள் இராணுவம் மற்றும் ஆளும் தரப்புக்கும் எதிராக பல பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் 


அதன் தொடர்ச்சியாக பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க இந்த அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் என்று கூறி குறித்த அளவீட்டு பணியினை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது 


குறித்த கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்