Breaking News

யாழ். நக­ரில் கள­வா­டப்­பட்ட நகை­கள் பொலி­ஸா­ரால் மீட்பு!

 யாழ். நக­ரில் கள­வா­டப்­பட்ட நகை­கள்

பொலி­ஸா­ரால் மீட்பு!




யாழ். நக­ரில் உள்ள வீடொன்­றில் இருந்து கள­வா­டப்­பட்ட எட்டரை பவுண் தங்க நகைகள் யாழ். குற்­றத் ­த­டுப்புப் பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்றையதினம் மீட்கப்பட்டன.


யாழ்ப்­பா­ணம் நக­ர்

­ப­கு­தி­யில் உள்ள குறித்த வீட்­டில் வசிக்­கும் கண­வ­னும் மனை­வி­யும் பணி நிமித்­தம் பக­லில் வீட்­டில் இருப்பதில்லை. அத­னால் வீட்­டைப் பரா­ம­ரிப்­ப­தற்­கென பணிப்­பெண் ஒரு­வரை வேத­னத்­துக்கு அமர்த்தினர்.


இந்­த­நி­லை­யில், அவர்­கள் வீட்­டில் இருந்த 14 பவுண் நகை­க­ளைக் காணாமல் போனது. இத­னால் அந்த நகை­கள் கள­வா­டப்­பட்­டி­ருக்­க­லாம் என யாழ்ப்­பா­ணம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரி­வில் முறைப்பாடு பதிவு செய்தனர்.


இத­னை­ய­டுத்து விசா­ர­ணை­களை துரி­த­க­தி­யில் முன்­னெ­டுத்த பொலிஸார், குறித்த வீட்­டில் பணிப்பெண்ணாக இருந்த 53 வயதான பெண்­ணைக் கைது செய்தனர். இதன்போது அவரிடமிருந்து களவாடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்­கப்

­பட்­டன.