Breaking News

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள யுத்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதற்கு முகம்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்

 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள யுத்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதற்கு முகம்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்


அரச அலுவலகங்களை சாதாரண முறையில் நடாத்திச் செல்லும் போது உத்தியோகத்தர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகவும், அலுவலகங்களைத் திறந்து வைத்திருப்பதற்


காகவும் கணிசமான அளவு எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது. அதன் பிரகாரம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள யுத்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகிப்பதில் நிச்சியமற்ற நிலைமை ஏற்படின், அதற்கு முகம் கொடுப்பதற்காக தற்போது நிலவும் எரிபொருள் இருப்புகளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், அந்நிலைமையினைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய சேவைகளுக்கு அதிகமான இடமொன்றினை வழங்குவதற்காக அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது தொடர்பில் பின்வருமாறு நடவடிக்கை எடுப்பதற்கு 2026.03.16 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


02. மீண்டும் அறிவிக்கும் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அரச அலுவலகக் கடமைகளுக்கான விடுமுறை தினமாகக் கருதப்படல் வேண்டும். அதன் பிரகாரம், புதன்கிழமைகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கடமைகளை அவ்வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறாயினும், ஏதேனும் உத்தியோகத்தரொருவர் அன்றைய தினத்தில் சேவையில் ஈடுபடுத்த வேண்டுமென தாபனத் தலைவர் தீர்மானிப்பார் எனில், உரிய உத்தியோகத்தர்களைச் சேவைக்கு அழைப்பதற்கு இது தடையாக அமையக்கூடாது என்பதுடன், அதற்கான விடுமுறை தினச் சம்பளம், மேலதிக நேரம் அல்லது ஈடுசெய் விடுமுறைகள் வழங்கப்படல் கூடாது.