இலங்கைக்கு எரிபொருள் வழங்கியமைக்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த ஜனநாயாக போராளிகள் தலைவர் வேந்தன் தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை..!
இலங்கைக்கு எரிபொருள் வழங்கியமைக்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த ஜனநாயாக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை..!
தற்போதைய எரிபொருள் நெருக்கடியான சூழலில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கியமைக்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த ஜனநாயாக கட்சி தலைவர் வேந்தன் தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும் இன்று கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வடமராட்சியில் நாடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு.
தற்போது உலகம் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. குறிப்பாக உலக நாடுகள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. எரிபொருள் விலை உயர்வால் பொருட்களினுடைய விலைகள் உயர்வடைந்திருக்கின்றது.
குறிப்பாக எரிபொருட்கள், எரிவாயு போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு எல்லா நாடுகளிலுமே ஒரு பிரச்சனையாக மாறி இருக்கின்றது. இந்த சூழலிலே எங்களுடைய நாட்டிலும் கூட இன்று எரிபொருள் பிரச்சனை என்பது பாரிய பிரச்சினையாகவுள்ளது. இதனால் மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பல துறைகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண் டருக்கிறார்கள். குறிப்பாக அரசு உத்தியோகத்தராக இருக்கலாம் அல்லது தொழிலாளர்களாக இருக்கலாம், வியாபாரம் செய்பவர்களாக இருக்கலாம், குறிப்பாக கடத்தொழிலாளிகள் விவசாயிகள் போன்றோர் இந்த எரிபொருட்களால் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த எரிபொருள் தட்டுப்பாடான சூழலை கருத்தில் கொண்டு இன்று அரசாங்கம் பல நடைமுறைகளை இங்கே போட்டிருந்தது. அதாவது அரச உத்தியோகத்தர்களுக்கு புதன்கிழமைகளில் விடுமுறை, qr முறை என்பன உள்ளன.
குறுகிய காலத்திற்குரிய எரிபொருள் கையிருப்பு தான் இருப்பதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கின்றது.
இந்த சூழலிலே எரிபொருளை கொல்வனவு செய்வதற்கு அரசாங்கமும் பல நாடுகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆனால் எங்களுக்காக இந்திய அரசாங்கம் 3700 மெட்ரிக் தொண் எரிபொருளை உடனடியாக ஜனாதிபதியாக கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக அந்த எரிபொருளை இலங்கைக்கு வழங்கி இருக்கின்றார். இலங்கை பாரிய இடர்களை சந்திக்கின்ற நேரத்திலும் அனர்த்தங்களை சந்திக்கின்ற நேரத்திலும், உடனடியாக இந்திய அரசாங்கம் உதவி செய்வது என்பது கடந்த கால வரலாறு. அதேபோன்றுதான் இந்த சூழலிலும் கூட இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த ஏரிபொருளை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. ஆகவே நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு இந்த இடத்திலே நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம். குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ச்சியாக எரிபொருளை இலங்கையிலே தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு விநியோகிப்பதற்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்க வேண்டும். கடந்த பாராளுமன்ற அமர்வின் போது ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் அவர்கள் இந்த கோரிக்கையையும் முன் வைத்திருந்தார். அதை நான் அந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்த வகையிலே தொடர்ந்தும் எமது மக்களுக்கான எரிபொருள் பிரச்சனைகளிலிருந்து நாங்கள் மீண்டு எழுவதற்கும், எங்களுடைய மக்கள் நிம்மதியாக அவர்களுடைய அன்றாட தொழில்களை செய்வதற்கும், தொடர்ந்து இந்தியா பங்களிக்க வேண்டும் என்று நாங்கள் இந்த இடத்திலே கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது.
