4 மணி நேரமாக கள்ள மண் ஏற்றிய வாகனத்தை துரத்தி பிடித்த விசேட அதிரடிப்படை..!
4 மணி நேரமாக கள்ள மண் ஏற்றிய வாகனத்தை துரத்தி பிடித்த விசேட அதிரடிப்படை..!
கற்கோவளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்சியாக சட்ட விரோத மணல் மண் அகழ்ந்து விற்பனை செய்து வருவதாக பருத்தித்துறை விசேட அதிரடி படையினருக்கு மக்கள் முறைப்பாடு வழங்க பட்டிருந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் சட்ட விரோத மணல் மண் அகழ்ந்து கொண்டிருந்தபோது சுற்றிவழைத்த சிறப்பு அதிரடி படையினர் வாகனத்தை கைப்பற்ற முற்பட்ட போது குறித்த வாகனம் மிக வேகமாக தப்பி சென்றுள்ளது. இந் நிலையில் இரவு 11:00 மணியிலிருந்து துரத்தி சென்ற விசேட அதிரடி படை அதிகாலை 4 மணியளவில் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர். எனினும் சாரதி தப்பி சென்றுள்ளார்.
கைப்பற்றபட்ட வாகனம் பருத்தித்துறை போலீசாரிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடி படையினாரால் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
