பொத்துவில் பகுதியில் 29 கிலோ மான் இறைச்சியுடன் நபர் ஒருவர் கைது
பொத்துவில் பகுதியில் 29 கிலோ மான் இறைச்சியுடன் நபர் ஒருவர் கைது
லஹுகல சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும், லஹுகல வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும் இணைந்து, போகமுயாயா பகுதியில் நடத்திய சோதனையில், 29 கிலோகிராம் மான் இறைச்சி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தேக நபரொருவரையும் கைது செய்தனர்.
சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட மான் இறைச்சியுடன் சந்தேக நபரையும் வழக்கு ஆவணங்களையும் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், நீதவான் அவருக்கு 1,35,000.00 அபராதம் செலுத்த உத்தரவிட்டார்.
இந்த சோதனையானது லஹுகல தேசியப் பூங்கா தலைமையகத்தில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
