பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை, psta வேண்டாம், PTA சட்டத்தை நீக்குக தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை, psta வேண்டாம், PTA சட்டத்தை நீக்குக தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்ககளை தடை செய்வது என்றும், அரசால் கொண்டு வரப்படவிருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்டம் கொண்டுவருவதை நிறுத்த வேண்டும் என்றும் , ஏற்கனவே இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரியும் இன்று சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் காலை 10:20 மணியளவில் யத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கும், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வு ஆரம்பமானது. இன்றைய அமர்விலேயே குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சபையில் தவிசாளர் தனது தலமை உரையில் அனைத்து உறுப்பினர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், மக்களுக்கு தரமான சேவையை வழங்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
தொடர்ந்து சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு சபை முன்மொழிவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அமைந்துள்ள மந்திகை பகுதியில் பாடசாலை ஒன்றிற்கு மிக. அருகமையிலும், மக்கள் குடியிருப்புக்கு மத்தியிலும், பிரதான வீதி ஓரமாக இருப்பதாலும், ஏற்கனவே இயங்கிவந்த. சவப்பெட்டி கடைக்கு கறுப்பு கண்ணாடியால் மறைக்கப்பட்டு சவப்பெட்டி மட்டும் விற்பனை செய்வதற்கு நிபந்தனையுடன் அனுமதிப்பது என்றும், ஏனைய இறந்த உடலங்களை குளிரூட்டியும், அங்குவைத்து இறந்த உடலங்களை பதப்படுத்தவும் தடைவிதிப்பது என்றும், பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆறாம் வட்டாரத்தில் குறித்தொதுக்கப்பட்ட மாகாண சபை நிதி மூலம் சீர்செய்வதற்கு அனுமதிப்பது என்றும், தீர்மானங்ள் நிறைவேற்றப்பட்டதுடன். மக்களால் சபைக்கு முறைப்பாடுகளுக்கு தொடர்பாகவும் ஆரயப்பட்டது. அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் சபைக்கு தவிசாளர் அறிவித்தார்.
தொடர்ந்து பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும், புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கின்ற சட்டத்தை வாபஸ் பெறகோரியும் சபையில் தீர்மானம் நிறைவற்றப்பட்டது. இதில் சபை அமர்வில் கலந்துகொண்ட 19 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து தீர்மனமானது. தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நால்வர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஒரு உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை. இதேவேளை பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் வியாபார. நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், அதனால் மாணவர்கள் உட்பட சிறுவர்கள் புகை மது பழக்கத்தில் ஈடுபடுவதாகவும், இராணுவம் தமது பாதுகாப்பு வேலைகளில் மட்டும் ஈடுபட வேண்டும் என்றும், இதனாலேயே பொதுமக்களுக்கு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற்பட்டன. மேலும் நிதிக் குழுவால் அனுமதிக்கப்பட்ட நிதி நடவடிக்கைகள் பல வற்றிற்கும் அனுமதி வழங்கியது. குறித்த அமர்வு பிற்பகல் வரை இடம்பெற்றது.
சபை பிற்பகல் 2:00 மணிவரை இடம்பெற்றது
