Breaking News

உடுத்துறையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த சீமெந்து லொறி விபத்து..!

 உடுத்துறையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த சீமெந்து லொறி விபத்து..!




யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் பார ஊர்தி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து சற்றுமுன் விபத்திற்குள்ளாகியுள்ளது 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் 


மருதங்கேணியில் இருந்து சீமெந்து பொதிகளுடன் ஆழியவளை நோக்கி பயணித்த குறித்த லொறி உடுத்துறை வேம்படி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது


விபத்தின் போது பார ஊர்தியில் பயணித்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 


குறித்த விபத்து நடந்த பகுதியில் உரிய வீதி குறியீடுகள் இல்லை என்பதாலையே இந்த பகுதியில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற

னர்