உளவியல் தொடர்பான சமூக பார்வை
உளவியல் தொடர்பான சமூக பார்வை
01. உளவியல் என்றால் என்ன?
உளவியல் என்பது மனித மனம், நடத்தை, உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை பற்றிய ஒரு ஆய்வு ஆகும்.
02. இன்றைய சமூகத்தில் மன அழுத்தம் அதிகரிப்பதற்கான காரணங்கள்?
வேலை அழுத்தம், சமூக ஊடகங்கள், குடும்ப பிரச்சனைகள், நிதி நெருக்கடி, மற்றும் தனிமை. பாலியல்ரீதியான பிரச்சனைகள் போன்றவை
03. மன அழுத்தம் இருந்தால் அதை எப்படி ஆரம்ப நிலையில் கண்டறியலாம்?
ஒருவர் பேசும் போது எரிச்சல் அடைவது , தூக்கமின்மை, பசி இன்மை, கவலை, மற்றும் உடல் வலி, அதீத சோர்வு
04. மன அழுத்தம் குழந்தைகளையும் பாதிக்குமா?
ஆம், குழந்தைகளும் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். அவர்களின் நடத்தை மற்றும் கல்வியில் மாற்றங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை போன்றவற்றால்
05. குழந்தைகளின் மனநலத்தில் பெற்றோரின் பங்கு என்ன?
பெற்றோர் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது, அவர்களுடன் நேரம் செலவிடுவது, மற்றும் நல்ல முன்மாதிரியாக இருப்பது, பிள்ளைகளுக்கு தங்களை நெருங்கினவர்களாக காண்பிப்பது
06. மனநலப் பிரச்சனைகள் இருப்பதை ஒப்புக்கொள்வதில் மக்கள் ஏன் தயங்குகிறார்கள்?
சமூக பயம் ,தனிமையான பயம், மற்றும் தவறான புரிதல். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலை அல்லது குடும்பத்தில் கவனயின்மை போன்றவை
07. உளவியல் ஆலோசனை என்றால் என்ன?
உளவியல் ஆலோசனை என்பது மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் ஒரு சிகிச்சை முறை. இது மருந்து சிகிச்சை அல்ல. அவர்களுக்கு ( உளநாடிக்கு ) நம்பிக்கை கொடுத்தல்
08. மனநலத்தை பாதுகாக்க பொதுமக்கள் தினசரி என்ன செய்யலாம்?
தியானம், உடற்பயிற்சி, சமூக தொடர்பு, மற்றும் நல்ல தூக்கம். விளையாட்டுக்கள் போன்றவை
09. எப்போது ஒரு உளவியலாளரை அணுக வேண்டும்?
மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை, மற்றும் தற்கொலை எண்ணங்கள் இருந்தால் மட்டுமே
10. மனநலம் குறித்து சமூகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
மனநலம் உடல்நலம் போன்றது. அதை பாதுகாக்க வேண்டும். உதவி கேட்க எந்த சூழ்நிலையிலும் தயங்க வேண்டாம். மனநலம் மிகவும் முக்கியம்! சமூகத்தில் பலர் மனநலம் குறித்து பேச தயங்குகிறார்கள், ஆனால் உண்மையில் அது ஒரு இயல்பான விஷயம். நான் சொல்ல விரும்பும் செய்தி மனநலம் குறித்து பேசுங்கள், உதவி கேளுங்கள், வலிமையாக இருங்கள். மனநலம் குறித்து பேச தயங்க வேண்டாம். நண்பர்கள், குடும்பம் அல்லது நிபுணர்களிடம் பேசுங்கள். உதவி தேவைப்பட்டால் கேட்க தயங்க வேண்டாம். மனநலம் நிபுணர்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளனர்.மனநலம் என்பது வலிமையின் அடையாளம், பலவீனத்தின் அடையாளம் அல்ல. நினைவில் கொள்ளுங்கள்: 'நீங்கள் தனியல்ல, உங்களுக்கு உதவி கிடைக்கும்'
நேர்காண்பவர் : இதுவரை நேரம் எங்களுடன் மனநலம் தொடர்பான சமூக பார்வை தொடர்பாக கலந்துரையாடிருந்த உளவியலாளர் அவர்களுக்கு நன்றிகள்!
நேர்காணல் விபரங்கள்
நேர்காணல் வழங்குபவர் : உளவியலாளர் சு.சுலக்ஷன் (Counsellor & International Human Rights Organisations)
நேர்காணல் காண்பவர் : அஞ்சலி சிறிரங்கநாதன் (Media Studies, University of Jaff
na)
