Breaking News

பருத்தித்துறை பிரதேச சபையால் மருதங்கேணி பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சிரமதான நடவெடிக்கை......!


பருத்தித்துறை பிரதேச சபையால் மருதங்கேணி பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சிரமதான நடவெடிக்கை......!



யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொதுச் சந்தையின் சுற்றுச்சூழல் முழுவதும் புற்கள் பற்றைகள் மற்றும் மிருக எச்சங்கள் சூழ்ந்து காணப்பட்டதால் மருதங்கேணி பொதுச்சந்தைக்கு வரும் மக்கள் பல அசோகரியங்களை எதிர் நோக்கினர் 


அது மட்டும் அல்லாமல் பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளும் தமது அன்றாட வியாபார நடவடிக்கையில் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர் 


இதனை அடுத்து வடமராட்சி கிழக்கு மக்கள் மற்றும் வியாபாரிகள் இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அவர்களிடம் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து 


உடனடியாக தவிசாளரின் உத்தரவின் படி மருதங்கேணி பொதுச் சந்தை வளாகம் முழுவதும் இன்றைய தினம் காலை பருத்தித்துறை பிரதேச சபையால் விசேட சிரமதான நடவெடிக்கை மேற் கொள்ள பட்டது