ஏ 35 பரந்தன் முல்லை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி இருவர் படுகாயம்
ஏ 35 பரந்தன் முல்லை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி இருவர் படுகாயம்
கிளிநொச்சி ஏ 35 பரந்தன் முல்லை வீதியில் முதலாம் மைகல் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த 3 பிள்ளையின் தந்தையான கருப்பையா ராஜகுமாரன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 35 பரந்தன் முல்லை வீதியில் முதலாம் மைகல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பாரவூர்தி விசுவமடு பகுதியில் இருந்து வருகை தந்த முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்
