Breaking News

ரயில் பருவச்சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன்படுத்த அனுமதி..!

 ரயில் பருவச்சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன்படுத்த அனுமதி..!



நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 


அதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபையின் அதி சொகுசு பேருந்துகள் தவிர்ந்த ஏனைய சாதாரண பேருந்துகளில் ரயில் மாதாந்த பருவச்சீட்டைப் பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 


இது தொடர்பில் பேருந்து ஊழியர்கள் மற்றும் குழுவினருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.