Breaking News

கடமை செய்ய தவறும் ஆசிரியர், கண்டிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்.

 கடமை செய்ய தவறும் ஆசிரியர்,

கண்டிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்.



வ/நெளுக்குளம் கலைமகள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது தற்காலிக இணைப்பு காலம் முடிவடைந்தும் தற்காலிக இணைப்பு பாடசாலையிலேயே தொடர்சியாக அறிக்கையிட்டு வருகின்றார். 2023 நவம்பர் மாதம் இவரின் இணைப்பு நிறைவடைந்தும் இன்றுவரை நிரந்தர வலயம் திரும்பாத இவருக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சங்க வவுனியா மாவட்ட தலைவர் கல்வியமைச்சின் செயலாளரை கோரியுள்ளார். இக்கடிதத்தின் பிரதி ஆளுநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


04.12.2023 முதல் துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் இவரின் இணைப்பு நிறைவு தொடர்பில் பல நினைவூட்டல் களை வழங்கிவந்த நிலையிலும் இவ்வாறு அரச நிர்வாகத்திற்க்கு முரனாக எவ்வாறு இந்த ஆசிரியரால் மட்டும் நடந்துகொள்ள முடிகிறது? இது தொடர்பாக இன்றுவரை செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் நடவடிக்கை எடுக்காதது ஏன்!!!


தேவையான வலயத்தில் ஆசிரியர் இல்லாமல் தேவையற்ற இடத்தில் இவர் சேவைக்கு அறிக்கையிடும் இச்செயற்ப்பாடும் அரச நிதி துஸ்பிரயோகம் என புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.