பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம்!
பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம்!
பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்
மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (16.07.2025) மு. ப. 11.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரமாக யூலை 14 தொடக்கம் 18 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . மேலும், இவ் தேசிய விழிப்புணர்வு வாரத்தில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார் .
இவ் விழிப்புணர்வு நிகழ்வின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலக சிரேஷ்ட முகாமையாளர் திரு. கே. தர்மேந்திரா அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு எஸ். சிவகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன்,
உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட
னர்.