வடமராட்சி கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
வடமராட்சி கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், இன்றையதினம்(13) மாலை 05.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள பாரதி விளையாட்டுக் கழக மைதானத்திற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது. இதில் வடமராட்சி கிழக்கின் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களும் இணைந்திருந்தனர்.
மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது
செய்தியாளர்
Mariyampillai Jeevan
JJ memories studio
