Breaking News

இந்து குருமார் அமைப்பின் இரங்கல்..!

 இந்து குருமார் அமைப்பின் இரங்கல்..!


சிவசாயுச்சியத்திற்கு பிரார்த்திப்போம்.


எமது யாழ்ப்பாணம் நல்லை


திருஞானசம்பந்தர் ஆதீன குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் பூரணரமடைந்த செய்தி சைவ மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்தியா மதுரை ஆதீன திரு மடத்தின் தொடர்புடன் 1966 ம் ஆண்டு ஆரம்பித்து சமயத்திற்காகவும் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்து பல்வேறு நற்பணிகள் ஆற்றிவந்துள்ள ஆதீனமாகும். முதலாவது ஆதீன கர்த்தராக மணிஐயரவர்கள் விளங்கினார்கள்.


நல்லை ஆதீன இரண்டாவது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் விளங்கினார்கள். அமைதியான சுபாவமுடையவராக அனைவரையும் அன்புடன் வரவேற்று அரவணைத்து வழிகாட்டிடும் ஓர் மகா புருஷராக விளங்கினார்கள்.


இச்சமயத்தில் சைவ மக்களாகிய நாமெல்லோரும் சுவாமிகள் திருவடி பணிந்தவர்களாக சிவசாயுச்சியத்திற்கு அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்வோம்.


ஓம்.


சிவாகமகலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.


தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.


சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.


செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.