சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி சிறுவர் சந்தை மிக சிறப்பாக இன்று இடம்பெற்றது
சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி சிறுவர் சந்தை மிக சிறப்பாக இன்று இடம்பெற்றது
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி சிறுவர் சந்தை இன்று (13) காலை 9மணிக்கு முன்பள்ளி ஆசிரியர்களால் ஆரம்பிக்கப்பட்டது
இச் சந்தையில் சிறுவர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அத்துடன் சிறுவர்கள் மிக வியாபாரிகள் போல உடை அணிந்து மிக விமர்சையாக ஆர்வத்துடன் பங்கேற்றனர்
சிறுவர்கள் தமது கைகளால் உற்பத்தி செய்த கைவர்ண பொருட்கள் மற்றும் மரக்கறிகள் உணவு பொருட்கள் ஆடைகள் என பல பொருட்களுடன் காட்சியளித்தனர்
இச் சந்தையில் கிராம மக்கள்கள் இளையோர்கள் பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறுவர்களின் விற்பனையை ஊக்குவித்தனர்கள்
சிறுவர்கள் சிறிது நேரத்திலே தமது பொருட்களை விற்பனை செய்து தமது விற்பனை திறமையை வளர்த்துக்
கொண்டனர்