Breaking News

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டின் நடைபயணம்

 யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டின் நடைபயணம்!






வரலாற்று சிறப்புமிக்க யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின் நடைபயணம் இன்று கல்லூரி முன்பாக இடம்பெற்றது.


இவ் நடைபயணமானது புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆரம்பித்து, பற்றிக்ஸ் பிரதான வீதி, கண்டி வீதி, வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டு வீதி, யாழ் பொது நூலக வீதியூடாக வந்து மீண்டும் பத்திரிசியார் கல்லூரியை வந்தடைந்தது.


1850ஆம் ஆண்டு பத்திரிசியார் மறை மாவட்ட ஆயரினால் குறித்த கல்லூரி உருவாக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் மேற்பார்வையில் 175 ஆண்டினை கொண்டாடிவருகின்றது.


யாழ். பத்திரிசியார் கல்லூரி உப அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அணிவகுப்பு மரியாதை, தமிழ் கலை, கலாச்சார ஊர்வலம், விளையாட்டு அணிவகுப்புகள், கல்லூரியின் விஞ்ஞான, கலை, சுகாதார மன்ற அமைப்புக்களின் அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்த மாணவ அமைப்பினர்கள், பங்கு முதல்வர்கள் என பலரும் இதில் கலந்துகொண்ட னர்.