Life Cities” திட்டத்தின் மூலம் 10 நகரங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
“Life Cities” திட்டத்தின் மூலம் 10 நகரங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
.....
நாட்டின் நகர அபிவிருத்தியில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள "Life Cities" திட்டத்தின் முதற்கட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பத்தரமுல்லையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 வரவுசெலவுத் திட்ட யோசனைக்கு அமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகள் கொண்ட இத்திட்டத்திற்காக 65,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, ஹற்றன், மாத்தறை, பதுளை, மாத்தளை, தம்புத்தேகம, சிலாபம் மற்றும் எஹெலியகொட ஆகிய 10 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
முறையான திட்டமிடல் மற்றும் தரவுகளின் அடிப்படையில், நிலையான பொருளாதார மையங்களை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
