மாகாண மட்ட கைக்குண்டு(கராத்தே) போட்டியில் வடமராட்சி கிழக்கு தர்மிலனுக்கு தங்கப் பதக்கம்!
மாகாண மட்ட கைக்குண்டு(கராத்தே) போட்டியில் வடமராட்சி கிழக்கு தர்மிலனுக்கு தங்கப் பதக்கம்!
மாகாண மட்டத்தில் நடைபெற்ற கைக்குண்டு (Taekwondo) போட்டியில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திப் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் போட்டியிட்ட பவானந்தராசா தர்மிலன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனையைப் படைத்துள்ளார்.
நாகர்கோவில் வெண்மதி விளையாட்டு கழகத்தின் சார்பில் களமிறங்கிய இவர், தனது மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி எதிரணிகளை வீழ்த்தி இப் தங்க பதக்கத்தைத் தன்வசமாக்கியுள்ளார்.
மற்றும் கடந்த மாதம் இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஆசிய மட்ட தைக்குண்டு போட்டியில் இலங்கை நாட்டின் சார்பாக பங்கு பற்றியமை குறிப்பிட்டத்தக்கது.
இவரது வெற்றி நாகர்கோவில் கிராமத்திற்கும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கும் பெரும் பெருமை சேர்த்துள்ள நிலையில், விளையாட்டு ஆர்வலர்களும் பொதுமக்களும் அவருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
