Breaking News

அரசாங்கத்தை 'ஒரு வழிபண்ணப் போவதாக' கூறி, அனுராதபுரத்தில் - பொதுஜன பெரமுன கட்சியினர், மக்கள் பேரணியொன்றை நடத்தினார்கள்.

 அரசாங்கத்தை 'ஒரு வழிபண்ணப் போவதாக' கூறி, அனுராதபுரத்தில் - பொதுஜன பெரமுன கட்சியினர், மக்கள் பேரணியொன்றை நடத்தினார்கள். 



அந்தப் பேரணியை நாமல் ராஜபக்ஷ தலைமையேற்று நடத்துவார் என்று, மொட்டுக் கட்சி கூறி வந்த நிலையில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


அதனால், அந்தப் பேரணியில் மொட்டுக் கட்சியினர் மஹிந்த ராஜபக்ஷவை இறக்கினார்கள்.


மஹிந்தவுக்கு - சுயமாக நடக்கக் கூட முடியாத நிலை. அந்த மனிதர் ரொம்பவும் 'ரிஸ்க்' எடுத்து, அந்தக் கூட்டத்தில் கலந்கோண்டமையைக் காணக் கிடைத்தது. 


மொட்டுக் கட்சியினரின் அந்தக் கூட்டத்தில் - அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்றார். 


அர்ச்சுனா பங்கேற்கிறார் என்பதை தெரிந்து கொண்டபோதே, நெஞ்சுக்குள் 'பக்' என்றது. 


அர்ச்சுனாவை மொட்டுக் கட்சியினர் மேடையில் 'சும்மா' இருக்க வைத்து - அனுப்பியிருக்கலாம். ஆனால் அவர்களின் கெட்ட காலம், அர்ச்சுனாவுக்கு கூட்டத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினார்கள்.


மைக் முன்பாக நின்ற அர்ச்சுனா - Bell, பிரேக் அனைத்தையும் இழந்தார். தன்னை அவர் 'புலி' என்றார். புலி பிரதிநிதியாகவே அந்தக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வதாக கூறினார். அதாவது, தன்னை அவர் எல்.ரி.ரி.யின் பிரதிநி என்றார்.


அர்ச்சுனா இப்படிப் பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 


'புலிகளை தோற்கடித்தவர்' என்று புகழாரம் சூட்டப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சிக் கூட்டத்தில், அவர் இருக்கும் போதே, தன்னை புலி என அர்ச்சுனா கூறியமையானது, அவர்களின் அனைத்து ஏற்பாடுகளையும் 'சைபர்'-ஆல் பெருக்கி விட்டது. 


இது இப்படியிருக்க, பொதுஜன பெரமுனவின் அந்தக் கூட்டத்தில், எல்.ரி.ரி.ஈ-அமைப்பை ஆதரிக்கும் வகையில் உரை நிகழ்த்தப்பட்டதாகக் கூறி, சமூக ஆர்வலர் அமைப்பொன்று CIDஇல் முறைப்பாடு செய்துள்ளது.


ஆயிரம் புத்திசாலிகளின் நிம்மதியைக் கெடுக்க, ஒரு அர்ச்சுனா போதும். 


#archuna #MP #SLPP #CID #MahindaRajapaksha #ulmabrook


Copy..