Breaking News

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் இரண்டாவது நாள் நினைவேந்தல் ....!



பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் இரண்டாவது நாள் நினைவேந்தல் ....!



பருத்தித்துறை பகுதியில் இன்றைய தினம் காலை 9:55 மணியளவில் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் பிரதான நினைவு தூவியில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி தலைமையில் இரண்டாவது நாள் நினைவஞ்சலி இடம்பெற்றது 



இவ் நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்பத்தில் சிறிது நேர அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வானது பருத்துறை நகர சபை பிதா வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் அவர்களால் ஈகை சுடர் ஏற்றப்பட்டு பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் நிரஞ்சன் அவர்களால் மலர் மாலை அணிவித்து ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்களால் மலர் அஞ்சலி செலுத்தி அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது 



அதனை தொடர்ந்து நினைவு நிகழ்வில் பங்கு கொண்ட சமூக பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகளால் மலர் அஞ்சலி செலுத்தி வைக்கப்பட்டது