Breaking News

அநுர அரசே திருந்து! 22 வேண்டாம்!! – மனோ கணேசன் வலியுறுத்து

 அநுர அரசே திருந்து! 22 வேண்டாம்!! – மனோ கணேசன் வலியுறுத்து 



“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் வேண்டாமென மக்கள் வலியுறுத்துகின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்.


மகாநாயக்க தேரர்கள், அனைத்து எதிர்க்கட்சி பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் என அனைவரும் இச்சட்டமூலத்தை எதிர்க்கின்றனர். எனவே, அரசாங்கம் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.