Breaking News

யாழ் வரணியில் உந்துருளி விபத்து - இளைஞன் சாவு..!

 யாழ் வரணியில் உந்துருளி விபத்து - இளைஞன் சாவு..!



பருத்தித்துறை , தும்பளை பகுதியை சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது 27) என்பவரே சாாடைந்தார். 


பருத்தித்துறை - கொடிகாமம் வீதியில் , கொடிகாமத்தில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பருத்தித்துறை நோக்கி உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வரணி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


உந்துருளி ஓட்டியான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , இளைஞனின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த கொடிகாம காவல்துறையினர் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.