Breaking News

இன்றைய வானிலை அறிக்கை 2026.02.20

 இன்றைய வானிலை அறிக்கை 

2026.02.20



வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.


கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, வதுளை, முல்லைத்தீவு மற்றும் பொலனறுவை   மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.




இலங்கைக்கு தென்கிழக்காக  வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 - 40 km  வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


கொழும்பு தொடக்கம்  புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான

மொஹமட் சாலிஹீன்.