Breaking News

கடுவெல பத்தரமுல்ல வீதி திறப்பு..!

 கடுவெல பத்தரமுல்ல வீதி திறப்பு..!



வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 


கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக கடுவெல நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த அத்துருகிரிய நுழைவாயிலும் நேற்று (02) திறக்கப்பட்டது. 


அதன்படி, தற்போது அந்த நுழைவாயிலைப் பயன்படுத்தி மக்கள் தமது பயண வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.