Breaking News

யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவாக்கம்..! அனுர அரசின் புதிய அறிவிப்பு

 யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவாக்கம்..!

அனுர அரசின் புதிய அறிவிப்பு



மாறி மாறி ஆட்சியிலிருந்த தென்னிலங்கை ஆட்சியாளர்களை போன்றே யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படுமென அனுர அரசும் அறிவித்துள்ளது.


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் விமான நிலைய ஓடுபாதையை நீட்டிக்க நம்புவதாகவும், சுமார் 130 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய எயார்பஸ் ஏ320 போன்ற குறுகிய உடல் விமானங்களை தரையிறக்கும் வகையில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலம் திட்டமிடப்பட்ட விரிவாக்கத்திற்கு போதுமானதாகக் கருதப்பட்டாலும், தேவைப்பட்டால் கூடுதல் நிலம் கையகப்படுத்தல் பரிசீலிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


முனைய விரிவாக்கத்திற்கான ரெண்டர் அழைப்புகள் அடுத்த மாதத்திற்குள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் உறுதிப்படுத்தியுள்ளார்.