ஆத்மசகாயனின் "இன்றைய தமிழன்"நூல் வெளியீடு..!
ஆத்மசகா
யனின் "இன்றைய தமிழன்"நூல் வெளியீடு..!
திருஞானசம்பந்தன் ஆத்மசகாயனின் "இன்றைய தமிழன்" நூல் வெளியீட்டு விழா கொடிகாமம் நட்சத்திர மஹால் விருந்தினர் விடுதியில் 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
உசன் இராமநாதன் மகா வித்தியாலய உப அதிபர் வை.விஜயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில்,
விருந்தினர்களாக மறவன்புலவு க.சச்சிதானந்தன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய பணிப்பாளர் ரி.கே. சுப்பிரமணியம்,
யா/பரியோவான் கல்லூரி ஓய்வு நிலை இரசானவியல் ஆசிரியர் மா.சிவசுப்பிரமணியம், தென்மராட்சி வலயக்கல்வி அலுவலக ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கோ.கைலாசநாதன், யாழ். மாவட்டச் செயலக தலைமைப் பொறியியலாளர் க.திருக்குமார், சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளர் பா.வே.இராசரத்தினம்(குட்டி விதானையார்) ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் நூல் அறிமுகவுரையை யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியற்றுறை தலைவர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டுரையை பலாலி ஆசிரியர் கலாசாலை ஓய்வுநிலை அதிபர் கு.சதாசிவமூர்த்தி நிகழ்த்தினார்.
இதன்போது பிரதம விருந்தினர் மறவன்புலவு சச்சிதானந்தன் நூலை வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளர் பா.வே. இராசரத்தினம் பெற்றுக்கொண்டார்.