மட்டக்களப்பில் வைத்தியரின் பண்ணையில் திருடிய கருவப்பங்கேனி திருடன் ஐஸ் போதை பொருளுடன் கைது
மட்டக்களப்பில் வைத்தியரின் பண்ணையில் திருடிய கருவப்பங்கேனி திருடன் ஐஸ் போதை பொருளுடன் கைது
மட்டக்களப்பு நகர் பகுதியில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் கோழி மற்றும் விலை உயர்ந்த வளர்ப்பு நாய் ஒன்றை திருடிய இளைஞனான பிரபல திருடன் ஒருவனை நேற்று செவ்வாய்க்கிழமை (19) ஐஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளதுடன், திருடப்பட்ட கோழிகள் மற்றும் நாயை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கிருந்த 30 கோழிகள் மற்றும் வளர்ப்பு நாய் ஒன்றும் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கருவப்பங்கேணியைச் சேர்ந்த இளைஞனான பிரபல திருடனை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(19) 2,700 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து வைத்தியரின் பண்ணையில் திருடப்பட்ட 30 கோழிகளில் சிலவற்றையும் நாயையும் மீட்டதுடன், குறித்த இளைஞன் நீண்டகாலமாக பல திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளளிவந்தவன் எனவும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிசார் இவரை 3 நாள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவருவதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.