செம்பியன் பற்று அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு பொலிசாரால் வழங்கப்பட்டது
செம்பியன் பற்று அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு பொலிசாரால் வழங்கப்பட்டது
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு இன்று (14) காலை 9மணியளவில் மருதங்கேணி போக்குவரத்து பொலிஸ் மற்றும் யாழ் மாவட்ட போக்குவரத்து பொலிசாரும் இணைந்து விழிப்புணர்வு ஒன்றினை ஏற்பாடு செய்தனர்
இதன் போது பாடசாலை மாணவர்கள் பிரதான வீதிக்கு அழைத்து வரப்பட்டு
அவர்களுக்கு வீதியில் எவ்வாறு பயணிப்பது மற்றும் துவிச்சக்கர வண்டியில் எவ்வாறு பயணம் செய்வது என்பவற்றை செயல் முறை மூலம் மாணவர்கள் இலகுவாக விளங்கிக்கொள்ள கூடியவாறு விழிப்புணர்வு செய்தனர்
இவ் நிகழ்வில் ஊர் மக்கள் பாடசாலை ஆசிரியர்கள் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்