Breaking News

தாழையடி சென் அன்ரனிஸ் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு போட்டி நேற்று(12) இடம்பெற்றது

 தாழையடி சென் அன்ரனிஸ் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு போட்டி நேற்று(12) இடம்பெற்றது 



யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி 

சென் அன்ரனிஸ் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு போட்டி நேற்று மாலை 3மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது 


விளையாட்டுப் போட்டியானது அருட்தந்தை யஸ்டின் ஆதர் தாழையடி பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் ஆரம்பமானது விளையாட்டுப் போட்டியில் பிரதமர் விருந்தினராக திரு க. சத்தியசீலன் முன் பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் வடமராட்சி மையம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு பேரின்ப நாதன் ஜெயக்காந்தன் அதிபர் தாளையடி றோ.க.த.க.பாடசாலை அவர்களும் கௌரவ விருந்தினராக திருமதி ஜெயந்தினி மருதங்கேணி கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் அவர்களும் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியினை சிறப்பித்தனர் 


குறித்த விளையாட்டு போட்டியில் சிறுவர்களின் பல விளையாட்டுக்கள் இடம் பெற்றன விளையாட்டுகளை கண்டு கழிப்பதற்கு ஊர்மக்கள் இளைஞர்கள் பெரியோர்கள் என பலரும் கலந்து கொ

ண்டனர்