உலகக் கிண்ண விதிமீறல்கள்; அர்ஜென்டினா நிர்வாகம் மற்றும் வீரர்கள் மீது ஃபிஃபா நடவடிக்கை!
உலகக் கிண்ண விதிமீறல்கள்; அர்ஜென்டினா நிர்வாகம் மற்றும் வீரர்கள் மீது ஃபிஃபா நடவடிக்கை!
2026 ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரின் போது ஏற்பட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக, அர்ஜென்டினா காற்பந்து சங்கம் (AFA) மற்றும் வீரர்கள் மீது சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA) ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 2-1 என வெற்றி பெற்ற பின், "ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானது" என்ற அரசியல் வாசகம் அடங்கிய பதாகையைக் காட்சிப்படுத்தியதற்காக AFA மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் வீசிய பொருட்கள், பாகுபாட்டுக் கோஷங்கள், போட்டிகள் தாமதமாகத் தொடங்கியது மற்றும் பாதுகாப்பு நெறிமுறை மீறல்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டியில் (0-1 தோல்வி) மைதானத்தில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாக லீண்ட்ரோ பரேடிஸ், நஹுயோ மொலினா உள்ளிட்ட வீரர்கள் மீதும் தனியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
