யாழில் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி திட்டம்..!
யாழில் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி திட்டம்..!
ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை(31.07.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன கலந்து கொண்டிருந்தார்.
மேலும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜே.பண்டார கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கேட்டறிந்திருந்தார்.
இதன்போது கடந்த காலத்தில் கொலை செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான நீதி உடனடியாக கிடைக்க வேண்டும் என யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
