ஆடல், பாடல், விளையாட்டுக்களுடன் சிறுவர்களால் கொண்டாடப்பட்ட பொங்கல் நிகழ்வு
ஆடல், பாடல், விளையாட்டுக்களுடன் சிறுவர்களால் கொண்டாடப்பட்ட பொங்கல் நிகழ்வு
ஆடல், பாடல், விளையாட்டுக்களுடன் சிறுவர்களால் பொங்கல் நிகழ்வு இன்று கொண்டாடப்பட்டது. முறிகண்டி தென்னிந்திய திருச்சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புனித பவுல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பொங்கல் நிகழ்வானது இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் பதிவாளர் வண பிதா கே எஸ் ஜோசப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், திட்ட இயக்குனர் வண குகனேஸ்வரனும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், நிகழ்வில் கலந்து கொண்ட போதகர் மற்றும் கண்டாவளை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரால் பாரம்பரிய முறைப்படி பிரதான பொங்கல் பானை வைக்கப்பட்டது.
தொடர்ந்து, புத்தரிசி இட்டு பொங்கல் கொண்டடாப்பட்டதுடன், ஆடல், பாடல், விளையாட்டுக்கள் என சிறுவர்களால் கொண்டடாப்பட்டது. பொங்கலை கொண்டாடும் வகையில் சிறுவர்களிற்கான விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் என பல இடம்பெற்றதுடன், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் 150 சிறுவர்கள் கலந்து கொண்டு பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகி
ழ்ந்தனர்.
