றஜீவன் எம்பிக்கும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலருக்குமிடையில் சந்திப்பு..!
றஜீவன் எம்பிக்கும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலருக்குமிடையில் சந்திப்பு..!
வடமராட்சி வடக்கு பிரதேச அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றஜீவன் தலமையிலான குழுவினற்கும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருலிங்கநாதன் அவர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் புயலிற்கு பிந்திய
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள்,
மக்களின் பாதுகாப்பு, அவசர தேவைகள், நிவாரணப் பொருட்கள் விநியோகம், மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.
இச் சந்திப்பில தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை, வல்வேட்டித்துறை நகரசபை பருத்தித்துறை நகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் புலோலியூர் ரமணன், றோயல் பிரதாப், அனல் றெஜி, திருமதி ஜெயதாஸ்ஜெஜிதா, நிஷாந் ஜனனி கட்சியின் செயற்பாட்டாளர் விஜய கிருஸ்ணா பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலர் தயாந்தன், ஆகியோர்
ஆகியோர் கலந்துகொண்டனர்
இதேவேளை கற்கோவளம் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் இராணுவம், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், பருத்தித்துறை பிரதேச சபை ஆகியோர் இணைந்து சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தொற்று நீக்கிகளும் வி
சிறப்பட்டன.
