கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பல நீர் மூலங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக கண்டி மாவட்டத்தில் உள்ள நிலையங்கள் முற்றிலும் செயலிழந்துள்ளன.
கேகாலை, மாவனெல்ல, வட மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேல் மாகாணத்தின் களனி ஆற்றின் நீர் மட்டம் 7 அடி ஆக அதிகரித்தால், அம்பத்தலே சுத்திகரிப்பு நிலையம் சவாலை சந்தித்து கொழும்புக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படலாம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார எச்சரித்துள்ளார்.
