Breaking News

பருத்தித்துறை மரக்கறி தந்தை மற்றும் வடிகாலமைப்பு விவகாரம் பலத்த வாத பிரதிவாதங்கள்..!

பருத்தித்துறை மரக்கறி தந்தை மற்றும் வடிகாலமைப்பு விவகாரம் பலத்த வாத பிரதிவாதங்கள்..!




பருத்தித்துறை நகரசபையில் மரக்கறி சந்தை விவகாரம் மற்றும் நீதிமன்ற பகுதி, மரக்கறி சந்தை வடிகால் அமைப்பது தொடர்பாக சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றதை தொடர்ந்து நிதி தொடர்பாக கண்காளரின் ஆலோசனையை பெறுவதற்க்காக சபை சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு கணக்காளருடன் பல்வேறு விடயங்கள் ஆலோசிக்கப்பட்ட பின்னர் மீண்டும் சபை ஆரம்பமாகியது.


நகரசபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் இடம் பெற்ற இன்றைய அமர்வில் தியாகி திலீபன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான அமரதவில் மழைகாலத்திற்கு முன்னர் வடிகால்கள் அமைத்தல், சீர்செய்தல் பொது இடங்களில் வெடி கொழுத்துவதை தடை செய்தல், வளப்பு மற்றும் கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்தல், கட்டாக்காலி நாய்களை பிடித்து கருத்தடை செய்வதற்கு கொடுப்பதற்கு ரூபா 600/- நிதி வழங்குதல், பருத்தித்துறை நகர சபைக்கு சட்ட ஆலோசகர் ஒருவரை நியமித்தல், திண்ம கழிவகற்றல் கட்டணம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபைக்கு கோரிக்கை கடிதம் அனுப்புதல், வியாபார உரிமம் பெறாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், சபையால் வழங்கப்படும் விசேட அனுமதிகள் தொடர்பான தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் நகரசபையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வீதி மற்றும் வடிகால் அமைப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாகவும் வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றன.


சபை அமர்வானது பிற்பகல் 1:30.மணியளவில் நிறைவுற்றதும்.

இதில் சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்