Breaking News

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு.....!


யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு.....!



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை களப்பு பகுதியில் நேற்றய தினம் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது 


இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


 கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் ஆழியவளை மற்றும் கட்டைக்காட்டு பகுதி முழுவதும் கடற்படையினரால் ஓர் தேடுதல் நடவெடிக்கை ஒன்றுமேற்கொள்ளப்பட்டது


இதன் போது ஆழியவளை களப்பு பகுதியில் 30 பொதிகள் அடங்கிய 102.350kg ஈரமான நிலையில் 23மில்லியனுக்கும் அதிகம் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவத்தடன் தொடர்புடைய எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை 



இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்