ஊழல் மற்றும் அரச துறை தாமதங்களுக்கு எதிராக எப்படி உரிமையை பயன்படுத்தலாம் என்பது தொடர்பான ஒன்றுகூடல்!
ஊழல் மற்றும் அரச துறை தாமதங்களுக்கு எதிராக எப்படி உரிமையை பயன்படுத்தலாம் என்பது தொடர்பான ஒன்றுகூடல்!
கிராம மக்கள் அரசாங்கத்திடம் இருந்து தகவல்களை எவ்வாறு பெறலாம். ஊழல் மற்றும் அரசத்துறைத் தாமதங்களுக்கு எதிராக எப்படி உரிமையைப் பயன்படுத்தலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன? கேள்வி கேட்கும் உரிமை மக்களிடம் உண்டு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் இவ்வாறான விழிப்புணர்வு ஒன்றுகூடல் நேற்றையதினம் குரும்பசிட்டி பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
IMC நிறுவனத்தின் ஏற்பாட்டில் வட மாகாண தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் S.தினேஷ் மக்களுக்கான விழிப்புணர்வை நடாத்தினார்.
இதில் மருத்துவர் வெற்றிவேல் நாகநாதன், வலி வடக்கு உபதவிசாளர் பொன்னுத்துரை தங்கராஜா, சட்டத்தரணிகள், IMC ஆலோசகர் ஜெயராசா மதுரா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்த
க்கது.