வலி. கிழக்கில் போட்டியிடும் சுயேட்சை குழு 1இன் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
வலி. கிழக்கில் போட்டியிடும் சுயேட்சை குழு 1இன் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் போட்டியிடும் சுயேட்சை குழு 1இன் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடானது நேற்றையதினம் நடைபெற்றது.
குறித்த சுயேட்சை குழுவானது தொலைக்காட்சி சின்னத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் மாத்திரம் போட்டியிடுகின்றது.
இந்த சுயேட்சை குழுவின் செயலாளர் இ.ஐங்கரன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்க அதனை சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளரான அ.ரஜீவன் பெற்றுக்கொண்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வலிகாமம் கிழக்கில் அதிகளவாக ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான சேவைகளை செய்வதே எமது நோக்கம் என அந்த சுயேட்சை குழுவில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.