Breaking News

எழுத்தாளர் மாயன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்..!

 எழுத்தாளர் மாயன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்..!



பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் ஆசிரியர் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (CTID) விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது ஒரு தனிநபர் மீதான நடவடிக்கை அல்ல. இது ஒட்டுமொத்தத் தமிழ் சமூகத்தின் வரலாற்றுப் பதிவுகளையும் குரலையும் மௌனமாக்க இலங்கை அரசு இயந்திரம் முன்னெடுக்கும் அரச பயங்கரவாதத்தின் ஒரு அங்கமாகும்.


இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல

புகைப்பட ஊடகவியலாளர் குமணன், எழுத்தாளர் தீபச்செல்வன் ஆகியோரின் படைப்புகளும் நூல்களும் தடுத்து வைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இன்றைய விசாரணைகளும் அரங்கேறுகின்றன.

@@@உண்மையைப் பதிவு செய்யும் பேனாக்களையும், புகைப்படக் கருவிகளையும் 'விசாரணை' என்ற பெயரில் அச்சத்திற்கு உள்ளாக்கும் இத்தகைய ஒடுக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.


"எங்கெல்லாம் ஒரு படைப்பாளியின் பேனா முனை நெறிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நாங்கள் உரத்த குரலாக நிற்க வேண்டும். வார்த்தைகளில் எமது வலிகள் வெளிப்பட வேண்டும்"


விசாரணைகள் மூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் நீதிக்கான எமது பயணத்தைத் தடுத்துவிட முடியாது. அரச பயங்கரவாதத்தின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக பன்னாட்டு அளவிலும் ஜனநாயக வழியிலும் எமது கேள்விகளும் எதிர்ப்புகளும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.


எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான இந்த தொடர் ஒடுக்குமுறையை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.