Breaking News

இனவாதத்தை மூலதனமாக வைத்துக்கொண்டே மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் ஆட்சி செய்கின்றன. அதைத்தான் அனுரவும் செய்கிறார்..! ஸ்ரீதரன் mp.


இனவாதத்தை மூலதனமாக வைத்துக்கொண்டே மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் ஆட்சி செய்கின்றன. அதைத்தான் அனுரவும் செய்கிறார்..! ஸ்ரீதரன் mp.



இனவாதத்தை மூலதனமாக வைத்துக்கொண்டே மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் ஆட்சி செய்கின்றன. அதைத்தான் அனுரவும் செய்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சோரன்பற்று பகுதியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அதன் முழு விபரமும் வருமாறு 




நாங்கள் தினம் ஒவ்வொரு செய்தியை கேள்விப்பட்டு கொண்டிருக்கின்றோம் 


அரசாங்கம் நிலக்கரியை கொள்வனவு செய்தது அதன் எரிபற்று நிலை 20 வீதமே இருந்தது. மிகுதி சாம்பலாக போய்விட்ட்து. இதனால் என்ஜின்கள் பழுதடைந்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நாட்டம், அந்த நிதியை மக்களிடமே அந்த நிதியை அறவிடுவார்கள். இது அரசாங்கம் விட்ட பாறியதொரு தவறு. 25 மில்லியன் டாலர்ஸ் ஐ மத்திய வங்கியில் காணவில்லை. அதுவும் 15 வரையான உயர்மட்ட அதிகாரிகள் கையெழுத்து வைத்தே அந்த நிதி எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு எனில் இலங்கை எப்படி முன்னேறுவது, உருப்படுவது. இலங்கை மட்டுமல்ல ஆசியா நாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததது ஊழல், பெருசாளி ஊழல்களிலிருந்து மாற முடியாது.அவர்கள் இதிலிருந்து விடுபடமாட்டர்கள். இவ்வளவு காலமும் பிக்குமார் சுதந்திரத்தை கொடுக்கவில்லை, பேரினாவாத சிந்தனையை பரப்புகிறார்கள் என்று. நேற்று காட்டுநாயக்கா விமான நிலையத்தில் 22 புத்த பிக்குமார் போதை வஸ்தை கொண்டு வத்திருக்கிறார்கள். அதன் பெறுமதி 110 கோடி, 110 கோடிக்கு வந்த போதை வஸ்து பொருட்கள், இந்த நாட்டில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்டால் ஒரு சந்ததியே அழிந்து விடும். 

எவ்வளவோ பேர் போதை பொருளுக்கு அடிமையாகி மண்டை லூசு ஆகிறான். மூளை வெடித்து சாகிறான். பரந்தனில் அண்மையில் ஒரு இளைஞன் போதையால் மரணித்திருக்கின்றார். 


நல்லதை சொல்லி கொடுக்க கூடிய, நல்லதை செய்கின்ற இறைவனால் படைக்கப்பட்ட தூதர்கள் என்ன செய்கின்றர்கள் என்றால் போதை வஸ்தை கொண்டுவந்து கொடுத்து இனத்தை அழிப்பதில் கவனமாக இருக்கின்றார்கள். 


இந்த நாட்டில் யார் வந்தாலும் மைத்திரியாக இருந்தாலும் மகிந்தவாக இருந்தாலும், ரணிலாக இருந்தாலும் சந்திரிக்காவாக இருந்தாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் பணம் உழைப்பதில் குறியாக உள்ளார்கள்.


இனவாதத்தை மூலதனமாக வைத்துக்கொண்டு தமிழர்களை எதோ ஒரு வகையில் அழிச்சு தள்ளி தாங்கள் இந்த நாட்டில் தங்களை அடையாளப் படுத்துவதில் கவனமாக உள்ளார்கள். 


இதைத்தான் அனுராவும் செய்தார். அனுரா வரும்போது அவரெல்லோ ஆள், அவரால் முடியும், என்று எங்களிலும் கொஞ்சப்பேர் பேசினார்கள். நாங்கள் பொறுத்திருந்து தானே சொல்லலாம். அனுரா வந்து ஒன்றாரை வருடங்கள் ஆகிவிட்டன.

இன்று வலிகாமம் வடக்கில் கையை காட்டி நடக்கிறார். உங்களுக்கு காணி தர மாட்டன் என்றுதான் அவர் கை காட்டினார். எங்கள் ஆட்கள் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள்ம் அவர் நடக்கும் பொது எங்களுக்கு கை காட்டினார் என்று. அவர் சொன்னது நான் காணி தர மாட்டன், பொத்திக்கொண்டு இருங்கோ என்று.என்றார்.