CPR நிறுவனத்தின் யாழ்,வவுனியா மாவட்ட இளைஞர்களை இணைத்து மாற்று நிகழ்ச்சி திட்டம்
CPR நிறுவனத்தின் யாழ்,வவுனியா மாவட்ட இளைஞர்களை இணைத்து மாற்று நிகழ்ச்சி திட்டம்
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாற்று நிகழ்ச்சி திட்டம் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவலடி கிராமத்தில் இன்று 22.02.2026 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் இயக்குனர் அருட்பணி ஜீவரட்ணம் அமதி அடிகளார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளராக ஆசிரியர் கனகரத்னம் கனகராஜா அவர்கள் பங்கு பற்றி நெறிப்படுத்தினார்.
இளைஞர் தலைமைத்துவத்தை பரவலாக்கமடையச் செய்யும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களை இணைத்து ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வில் பூம்புகார், நாவலடி இளைஞர் யுவதிகள் மற்றும் புளியங்குளம் லைக்கா குடியிருப்பு இளைஞர் யுவதிகள் பங்கு பற்றி பயனடைந்தனர்.
தொடர்ந்து இளையோர்களுக்கிடையே நற்புறவை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியும் யுவதிகளுக்கான வலைப்பந்தாட்ட போட்டியும் இடம் பெற்றதுடன் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கேடயமும் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
